வாழ்வும் இல்லை சாவும் இல்லை - இது என்ன வாழ்க்கையோ? காதலுக்கு கண்ணீர் மீது ரொம்ப தான் வேட்கையோ? முள்ளின் மீது மெத்தை வைத்து நானும் தூங்கவோ? மரணம் வந்த பின்பு நீ வந்து காண்பாயோ?
நான் உன்னை காதலிக்கிறேன் `நீ என்னை காதலிக்கிறாயா?` என்பது கேட்டு வாங்கும் காதல் நான் உன்னை விரும்புகிறேன் விரும்பிகிட்டே இருப்பேன் நீ என்னை விரும்பாவிட்டால் கூட இது தான் என்னுடைய காதல் எதையும் எதிர்பாராத காதல்!
மறந்து விடு - உந்தன் மனசு சுமக்க முடியாமல் மணக்கும் என் நினைவுகள் கணக்க தொடங்கியிருந்தால் மறந்து விடு - ஆனால் என்றும் எனக்கு சுகமானா சுமை தானடி உன் நினைவுகள்!