Mar 31, 2010

காதல் விதை....

விதைக்க தான் தெரிகிறது
உன் விழிகளுக்கு - காதல்
பயிர் எங்கே வளர்கிறது
என்று கவனிக்க தெரியவில்லை!


வேசம்?

எந்தன் காதலை புரிந்து கொள்ளாதவள் மாதிரி
ஏனடி ஆடுகிறாய் நாடகம்?
உண்மை காதலை பகிர்ந்து கொள்ள
கண்களை விட வேண்டுமா வேறு ஊடகம்?

பேராசைகாரன்

நான் பேராசைகாரன் தான்
ஆசையே இல்லாத உன் மீது
ஆசை வைத்த நான்
பேராசைகாரன் தான்.

அறிவீனம்!

பறக்க பார்க்கிறாயே
அன்பான காதலியே - நீ
அறிய மாட்டாய் நான் தான்
உந்தன் சிறகென்று!

Mar 29, 2010

செல்லா காசு


கனவுகளை கூடச்
சேர்த்து வைத்தேன்
கருமியை போல
சேர்த்து வைத்த
அத்தனையும் செல்லாதென்று
அறிவித்து விட்டதடி
உன் ஓர் அழைப்பிதழ்!

காதலின் ஆசையோ?

வாழ்வும் இல்லை
சாவும் இல்லை - இது
என்ன வாழ்க்கையோ?
காதலுக்கு கண்ணீர் மீது
ரொம்ப தான் வேட்கையோ?
முள்ளின் மீது மெத்தை
வைத்து நானும் தூங்கவோ?
மரணம் வந்த பின்பு நீ
வந்து காண்பாயோ?

Mar 28, 2010

மாறுமா?

மொட்டவிழாத மல்லிகையின்
வாசம் தான் மாறுமா?
மூடி வைத்த எந்தன் காதல்
மோசமாகி தான் போகுமா?

தாமதம்!

காதல் வந்து சேர்ந்த போது
என்னிடம் வார்த்தை வரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது
காதலி என்னிடம் இல்லை- ஆனால்
உன் மீது கொண்ட காதல்
என்றும் என்னுடன் தானடி!

Mar 27, 2010

என் காதல்!


நான் உன்னை காதலிக்கிறேன்
`நீ என்னை காதலிக்கிறாயா?` என்பது
கேட்டு வாங்கும் காதல்
நான் உன்னை விரும்புகிறேன்
விரும்பிகிட்டே இருப்பேன்
நீ என்னை விரும்பாவிட்டால் கூட
இது தான் என்னுடைய காதல்
எதையும் எதிர்பாராத காதல்!

காரணம்



உனக்கும் எனக்கும் இடையில்
ஏன் இந்த தூரம்
அதனால் தான் என் கண்ணில்
என்றும் ஈரம்
என்று வரும் நான் உன்னை
சேரும் நேரம்
அது வரை தாங்குமா உயிரை
இந்த தேகம்?

முடிவிலி!


நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு - அதனால்
கரைகளின் மெளனம் கலைவதுண்டா?
சொல்லிய காதல் முடிவதுண்டு - ஆனால்
சொல்லாத காதல் முடிவதுண்டா?

துணை

தனிமையில் இருந்த எனக்கு
துணையாக நீ வந்தாயடி
இன்று நீ எனை பிரிந்தாலும்
நான் தனிமையில் வாடவில்லை - இனி
என்றும் உன் நினைவு தான்
எனக்கு துணையடி!

Mar 24, 2010

வருவாயா?

காதல் கொண்டேன்
உன் மீது - நீயின்றி
என் மனம் ஏங்குது
நீ வருவாயா
வெகு விரைவில்?

சுமை!

மறந்து விடு - உந்தன்
மனசு சுமக்க முடியாமல்
மணக்கும் என் நினைவுகள்
கணக்க தொடங்கியிருந்தால்
மறந்து விடு - ஆனால்
என்றும் எனக்கு
சுகமானா சுமை தானடி
உன் நினைவுகள்!

யார் தப்பு?

என்னால் யாரையும் புரிந்து
கொள்ள முடியவில்லையா? - அல்லது
என்னை யாராலும் புரிந்து கொள்ள
முடியவில்லையா?