
நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த
சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்
உன் நினைவு என் உள்ளத்தில்
அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..
அதை எப்படி அழிப்பது,...
என் உயிரைக் கொடுத்தா?
நடக்காது என்று தெரிந்தும்
என்னை ஏன் நாடுகிறாய்?
காலம் செய்த கோலத்தால்
விதியின் விளையாட்டால் பிறந்தேன்
நான் உன்னை ஏமாற்றவில்லை
நான் உன்னை சேர முடியாது
என்று தெரிந்தும் ஏன் காத்திருக்கிறாய்?
காதலை நினைத்து காலத்தைக்
கடத்தாமல் கடமையை தொடர்ந்திடு
காலம் பதில் சொல்லும் பார் ...

எமது உறவு விடையில்லா வினாவாகியது
விதி எம்மை வென்று விட்டது
இன்னும் என்னுடன் கை சேர்க்க
வேண்டும் என்று எண்ணாமல்
என்னில் இருந்து விலகிவிடு
கடந்ததை மறப்பது கடினமென்றால்
காதலையே மறந்து விடு
நிஜம் எதுவென்று தெரியாமல்
நிழல்களை தேடுகிறாய்
இத்தனையும் உனக்காக
சொல்லும் ஆறுதல் அல்ல
எனக்காகவும் தான் ...
நான் வேண்டாம் விலகி விடு...
என்னை மறந்து விடு...
மன்னித்து விடு ......
7 comments:
யாருக்கு இந்த கவிதை??? ஆனால் நல்லா இருக்க...
கற்பனையின் எழுத்து வடிவம் கவிதை என்பது புரியாத தோழி பிரஷா?
கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்
நல்ல கவிதையாகியிருக்கக் கூடுமோ?
கவிதை அருமை
நிச்சயமாக அடுத்த முறை என்னால் முடிந்ததை முயற்சி பண்ணுவன்.
ரொம்ப நன்றி உங்க கருத்துக்கு
நான் வேண்டாம் விலகி விடு...
என்னை மறந்து விடு...
மன்னித்து விடு ......///
மன்னிப்பு என்ற ஒரு வார்ததையில் காதலை மறந்துவிட முடயாது சகோ.. அந்த மன்னிப்பும் அவள் மனதில் தீராத காயத்தைதான் ஏற்படுத்தும்..
kaathal kai koodi kalyaanathil mudiya pokum velaiyil eni ippadi sokamaai eluthathe
Post a Comment